/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கோழிப்பண்ணையால் ஈ தொல்லை என புகார்
/
கோழிப்பண்ணையால் ஈ தொல்லை என புகார்
ADDED : டிச 11, 2024 01:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோழிப்பண்ணையால்
ஈ தொல்லை என புகார்
ஈரோடு, டிச. 11-
பெருந்துறை, காஞ்சிகோவில் சாலை, திருவேங்கிடம்பாளையம், தாய் நகர் பகுதி மக்கள், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், மனு வழங்கி கூறியதாவது: திருவேங்கிடம்பாளையம், தாய் நகர் பகுதியில் நுாற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.
இங்கு தனியார் கோழிப்பண்ணை செயல்படுகிறது. கழிவுகளை அகற்றாமல் சேமித்து வைத்துள்ளதால், பண்ணையிலும், பண்ணையை சுற்றியுள்ள பகுதி குடியிருப்புகளிலும் ஈக்களின் தொல்லை அதிகரித்துள்ளது. மழை காலமாக உள்ளதால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதுபற்றி விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.

