/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கொடுக்காத விண்ணப்ப படிவத்துக்கு ரூ.௧௦௦ வசூல் மாநகராட்சி வரி வசூல் மையங்கள் மீது புகார்

ADDED : நவ 23, 2024 01:34 AM
ஈரோடு, நவ. 23-
ஈரோடு மாநகராட்சியில், 10க்கும் மேற்பட்ட இடங்களில், வரி வசூல் மையங்கள் செயல்பட்டு வருகிறது. இவற்றில் சொத்து வரி பெயர் மாற்றம், பிறப்பு, இறப்பு சான்றிதழ், காலிமனை வரி உள்ளிட்ட சேவை செயல்படுத்தப்பட்டு வருகிறது. இவற்றுக்கு தனித்தனி விண்ணப்பம் உள்ளது.
இதில் சொத்து வரி பெயர் மாற்றம் தொடர்பான விண்ணப்பம், சில மாதங்களாக இல்லை.
இதனால் சொத்து வரி பெயர் மாற்றம் செய்ய வரும் மக்கள், வெள்ளைத்தாளில் வரி விதிப்பு எண், வரி விதிப்புத்தொகை உள்ளிட்ட விபரங்களை எழுதி, மாநகராட்சி அலுவலர்களிடம் அளிக்கின்றனர். அப்போது விண்ணப்ப படிவ கட்டணமாக, 100 ரூபாய் வசூலிப்பதாக, மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
கொடுக்காத விண்ணப்ப படிவத்துக்கு கட்டணம் வசூலிக்கும், மாநக
ராட்சி அலுவலர்கள் மீது ஆணையாளர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.