/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
இ.பி.எப்., தொகை செலுத்த கூடுதல் வசூல்; ஈரோடு மாநகராட்சி ஊழியர்கள் மீது புகார்
/
இ.பி.எப்., தொகை செலுத்த கூடுதல் வசூல்; ஈரோடு மாநகராட்சி ஊழியர்கள் மீது புகார்
இ.பி.எப்., தொகை செலுத்த கூடுதல் வசூல்; ஈரோடு மாநகராட்சி ஊழியர்கள் மீது புகார்
இ.பி.எப்., தொகை செலுத்த கூடுதல் வசூல்; ஈரோடு மாநகராட்சி ஊழியர்கள் மீது புகார்
ADDED : டிச 23, 2024 09:28 AM
ஈரோடு: தொழிலாளர்களின் இ.பி.எப்., பணத்தை முறைப்படி அலுவலகத்தில் செலுத்த, மாநகராட்சி ஊழியர்கள் கூடுதல் தொகை வசூலிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட, 60 வார்டுகளில் சுய உதவி குழுக்கள் மூலம் துப்புரவு உள்ளிட்ட பல்வேறு பணி மேற்கொள்ளப்படுகிறது. இவர்களிடம் இ.பி.எப்., தொகை பிடித்தம் செய்து அலுவலகத்தில் செலுத்தப்படுகிறது. அவ்வாறு பணம் செலுத்தும் போது தொழிலாளர்கள் ஒவ்வொருவரிடமும் அதிகப்படியான தொகை வசூலிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு துாய்மை பணியாளர் சங்க மாநில தலைவர் சண்முகம் கூறியதாவது: குழுவை சேர்ந்த துப்புரவு பணியாளர்களுக்கு 12 சதவிகிதம் சம்பளத்தில் பிடித்தம் செய்து இ.பி.எப். தொகை செலுத்த வேண்டும். மூன்று மாதங்களுக்கு ஒரு முறை இ.பி.எப்., செலுத்தப்படுகிறது. அவ்வாறு தொகை செலுத்தும்போது மாநகராட்சி ஊழியர்கள் ஆளுக்கு தகுந்தாற்போல், 125 ரூபாய் முதல் 300 ரூபாய் வரை பெற்று கொள்கின்றனர். ஏஜென்சி மூலம் செலுத்துவதால் கூடுதல் தொகை செலுத்த வேண்டும் என்று கூறுகின்றனர். இந்த வகையில் மூன்று மாதத்துக்கு ஒரு முறை பெருந்தொகை வசூலிக்கப்படுகிறது. மகளிர் குழு சார்பில் மட்டும், 1,500 பேர் பல்வேறு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். எனவே மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து, இ.பி.எப்., தொகையை மட்டும் பிடித்தம் செய்ய வழிவகை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

