/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
புறம்போக்கு நிலம் ஆக்கிரமிப்பு பஞ்., தலைவி, கணவர் மீது புகார்
/
புறம்போக்கு நிலம் ஆக்கிரமிப்பு பஞ்., தலைவி, கணவர் மீது புகார்
புறம்போக்கு நிலம் ஆக்கிரமிப்பு பஞ்., தலைவி, கணவர் மீது புகார்
புறம்போக்கு நிலம் ஆக்கிரமிப்பு பஞ்., தலைவி, கணவர் மீது புகார்
ADDED : ஜன 13, 2024 03:47 AM
காங்கேயம்,: காங்கேயம் அருகே அரசு புறம்போக்கு நிலம் ஆக்கிரமிப்பு செய்ததாக பஞ்., தலைவி, கணவர் மீது, கலைஞர் மக்கள் சேவை திட்ட முகாமில், புகார் அளிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து ஆலாம்பாடி பகுதி பிரதீப்குமார் தலைமையில், ஆலாம்பாடி ஊராட்சியில் நடந்த, கலைஞர் மக்கள் சேவை திட்ட முகாமில், வி.ஏ.ஓ., சொக்கரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:ஆலாம்பாடி ஊராட்சி தலைவி ராஜாமணி, அவரின் கணவர் ரங்கசாமி சேர்ந்து, அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து, நெருங்கிய உறவினருக்கு வீடு கட்டி கொடுத்துள்ளனர்.
மொத்தம் இரண்டு ஏக்கர் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதுகுறித்து ஜமாபந்தியில் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. கிராமசபை கூட்டத்தில் விவாதித்த போதும் சரியான பதில் கூறவில்லை. மேலும், சென்னிமலை கவுண்டன்வலசில் ஊர்மக்கள் குடிநீருக்காக பயன்படுத்தும் ஆழ்துளை கிணறு அருகில், துணைத்தலைவர் வீட்டு கழிவுநீர் சாக்கடை குழி உள்ளது. இதை அகற்ற பலமுறை அதிகாரிகளிடம் கூறியும் நடவடிக்கை எடுக்கவில்லை. புகார்கள் குறித்து ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர். காங்கேயம் வடக்கு ஒன்றிய தி.மு.க., செயலாளர் கருணைபிரகாஷ், மக்களும் மனு தர வந்தனர்.