/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பிரதமர் குறித்து அவதூறு போஸ்டர் முன்னாள் எம்.எல்.ஏ., மீது புகார்
/
பிரதமர் குறித்து அவதூறு போஸ்டர் முன்னாள் எம்.எல்.ஏ., மீது புகார்
பிரதமர் குறித்து அவதூறு போஸ்டர் முன்னாள் எம்.எல்.ஏ., மீது புகார்
பிரதமர் குறித்து அவதூறு போஸ்டர் முன்னாள் எம்.எல்.ஏ., மீது புகார்
ADDED : மார் 16, 2024 09:27 AM
புன்செய்புளியம்பட்டி: ஈரோடு மாவட்டம் புன்செய்புளியம்பட்டி, பா.ஜ., நகர தலைவர் தங்கமணி தலைமையிலான, 30க்கும் மேற்பட்டோர், புன்செய் புளியம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் நேற்று மனு அளித்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:
புன்செய் புளியம்பட்டி நகராட்சி பகுதிகளில், பல்வேறு இடங்களில், 'மோடி அரசே 100 நாள் வேலையை முடக்காதே; ஏழைகளின் வயிற்றில் அடிக்காதே; நிதியை ஒதுக்கு, வேலையை வழங்கு' என்று போஸ்டர் ஒட்டப்பட்டது. இந்த செயல், பிரதமர் மோடியின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலும், அவதுாறான கருத்தை பரப்பும் வகையிலும் உள்ளது.
இந்த போஸ்டர்களை ஒட்டிய, பவானிசாகர் தொகுதி முன்னாள் இ.கம்யூ., - எம்.எல்.ஏ., சுந்தரம், மகேந்திரன் மற்றும் அவரை சார்ந்தோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.