/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கொ.ம.தே.க., நிர்வாகிகளை தாக்கியதாக புகார்
/
கொ.ம.தே.க., நிர்வாகிகளை தாக்கியதாக புகார்
ADDED : ஆக 04, 2025 08:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: தீரன் சின்னமலை நினைவு நாள் நிகழ்ச்சி, அறச்சலுாரை அடுத்த ஓடாநிலையில் நேற்று நடந்தது. இதற்காக வந்த கொ.ம.தே.க., பொள்ளாச்சி நிர்வாகிகள் ரமேஷ், 42, கார்த்தி, விஸ்வநாதனை, தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை (யுவராஜ்) நிர்வாகிகள் தாக்கியுள்ளனர்.
தகவலறிந்த போலீசார் இருதரப்பினரையும் தடுத்து அப்புறப்படுத்தினர். மூன்று பேரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பொள்ளாச்சி மாவட்ட செயலாளர் விவேகானந்தன், அறச்சலுார் போலீசில் புகார் அளித்துள்ளார். இதில் மூன்று பேரை தாக்கியவர்களை, கைது செய்ய வலியுறுத்தியுள்ளார்.