/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
உரிய அனுமதி பெறாமல் 'பனை' வெட்டியதாக புகார்
/
உரிய அனுமதி பெறாமல் 'பனை' வெட்டியதாக புகார்
ADDED : டிச 13, 2024 01:04 AM
உரிய அனுமதி பெறாமல் 'பனை' வெட்டியதாக புகார்
ஈரோடு, டிச. 13-
ஈரோடு, ரங்கம்பாளையம், அன்னை சத்யா நகரை சேர்ந்தவர் மோகன் குமார். ஈரோடு எஸ்.பி., அலுவலகத்தில் நேற்று அளித்த மனுவில் கூறியிருப்ப
தாவது:
மாநகராட்சி, 56வது வார்டில், 30 அடி அகல சாலையில் பனை மரங்கள் அனுமதியின்றி வெட்டப்பட்டுள்ளன. மேலும், 50 யூனிட் கிராவல் மண்ணும் வெட்டப்பட்டுள்ளது. ரங்கம்பாளையத்தை சேர்ந்த துளசிமணி, காந்திமதி, கார்த்திக் பனை மரங்களை வெட்டி, கிராவல் மண்ணை எடுத்துள்ளனர்.
கலெக்டர் அனுமதி அளித்தால் மட்டுமே பனை மரங்களை வெட்ட முடியும். ஆனால் அனுமதி பெறாமல் இச்செயலில் ஈடுபட்ட
மூவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார். இதில் கார்த்தி, திண்டல் பகுதி அ.தி.மு.க., செயலாளராக உள்ளார் என்றும்
தெரிவித்துள்ளார்.

