/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
நகராட்சி தலைவர், துணை தலைவர் மீது குற்றச்சாட்டு ஆதாரமற்ற அறிக்கைகள் விட்டதாக ஆதாரத்துடன் புகார்
/
நகராட்சி தலைவர், துணை தலைவர் மீது குற்றச்சாட்டு ஆதாரமற்ற அறிக்கைகள் விட்டதாக ஆதாரத்துடன் புகார்
நகராட்சி தலைவர், துணை தலைவர் மீது குற்றச்சாட்டு ஆதாரமற்ற அறிக்கைகள் விட்டதாக ஆதாரத்துடன் புகார்
நகராட்சி தலைவர், துணை தலைவர் மீது குற்றச்சாட்டு ஆதாரமற்ற அறிக்கைகள் விட்டதாக ஆதாரத்துடன் புகார்
ADDED : டிச 03, 2024 07:20 AM
பு.புளியம்பட்டி,: தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின், ஈரோடு மாவட்ட அமைப்பு செயலாளர்
ஜோதி அருணாச்சலம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:புன்செய் புளியம்பட்டி நகராட்சியில் புதிதாக வணிக வளாகம் கட்ட கடந்த ஆக., மாதம்
ஒப்பந்த புள்ளி கோரப்பட்டு ஆக.,29ம் தேதி ஆணை வழங்கி, பணி மேற்கொள்ளப்பட்டு
வருகிறது. ஆனால் இந்த இடம், கால்நடை பராமரிப்பு துறைக்கு சொந்த-மான
மந்தைவெளி புறம்போக்காக உள்ளது. எனவே நிலத்தை மீட்டு கொடுக்க
கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது. இதன் பிறகு கட்டுமான பணி வேகமெடுத்த
நிலையில், அனைத்து கட்சி சார்பில் நவ., 16ம் தேதி காத்திருப்பு போராட்டம் நடந்தது.
இதற்கு முந்தைய நாள் அதாவது நவ.,15ம் தேதி நகராட்சி நிர்-வாகம், கடைகள்
கட்டுமான மந்தை வெளி நிலத்தை வகைப்-பாடு மாற்றி கொடுக்க, கலெக்டருக்கு கடிதம்
அனுப்பியுள்ளனர். அதற்கு முன்பே நவ.,10ம் தேதி மந்தைவெளி இடத்துக்கு ஈடாக, இருமடங்கு நிலம்
கால்நடை பராமரிப்பு துறைக்கு வழங்கப்பட்-டதாக, அடிப்படை ஆதாரமற்ற
அறிக்கையை, நகராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவர் வெளியிட்டுள்ளனர். இந்நிலையில் நவ., 29ம் தேதி நடந்த நகர்மன்ற கூட்டத்தில், வணிக வளாகம் கட்டும்
இடத்தை நகராட்சி பெயரில் மாற்றம் செய்யவும், மந்தை வெளி நிலத்துக்கு பதில் மாற்று
நிலம் கால்-நடை பராமரிப்பு துறைக்கு வழங்கவும், கலெக்டருக்கு பரிந்து-ரைக்க
தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். ஆனால் மூன்று மாதத்-துக்கு முன்பே,
சம்பந்தப்பட்ட மந்தை நிலத்தில் கடைகள் கட்ட நிர்வாக அனுமதி பெற்றது எப்படி?
எதன் அடிப்படையில் டெண்டர் விட்டு பணியாணை வழங்கப்பட்டது? கால்நடை பராமரிப்பு துறைக்கு மாற்றிடம் வழங்க கோரி, தற்-போது தான் தீர்மானம்
நிறைவேற்றியுள்ள நிலையில், 40 ஆண்டு-களுக்கு முன்பே கால்நடை பராமரிப்பு
துறைக்கு இரு மடங்கு நிலம் ஈடாக நகராட்சி மூலம் வழங்கப்பட்டதாக, ஆதாரமற்ற
பொய் தகவலை நகராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவர் அறிக்கையாக
வெளியிட்டுள்ளனர். இவர்கள்தான் கோடிக்கணக்-கான ரூபாய் மதிப்பிலான
திட்டங்களை கையாள்கின்றனர். இதெல்லாம் எப்படி இருக்குமோ? என்ற
சந்தேகமும் ஏற்பட்டுள்-ளது. உண்மைக்கு புறம்பான தகவல்களை வெளியிட்ட
நகராட்சி தலைவர், துணைத்தலைவர் மீது, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க
வேண்டும். இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.