/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
துப்புரவு பணியாளர்களிடம் ரூ.1,000 கட்டாய வசூல் மாநகராட்சி சுகாதார மேற்பார்வையாளர் மீது புகார்

ADDED : அக் 14, 2024 05:10 AM
ஈரோடு: ஈரோடு மாநகராட்சியில் துாய்மை தொழிலாளர், டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர், ஓட்டுனர் என, 1,500க்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர்.
இதில் டாடா ஏஸ் போன்ற நுாற்றுக்கும் மேற்-பட்ட சிறு வாகனங்களில், வீடு தோறும் குப்பை சேகரிக்கும் பணியில், வயது முதிர்ந்தோர், உயரம் குறைவான பெண்கள் அதிகம் ஈடுபடுத்தப்படுகின்றனர். இவர்களிடம் சுகாதார மேற்-பார்வையாளர்கள், மாதந்தோறும், 1,000 ரூபாய் வசூலிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அப்படி தராதவர்களை, சாக்கடை சுத்தம் செய்தல், குப்பை அரைக்கும் பரிவு, லாரி ஆகியவற்றுக்கு அனுப்புவதாக புகார் கிளம்பியுள்ளது.'சுகாதார மேற்பார்வையாளர்களுக்கு பணம் தராத வயது முதிர்ந்த பணியாளர், பெண்களை, உயரமான லாரிகளுக்கு (டிப்பர்) அனுப்-புவதால், அவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து மாநகராட்சி நிர்வாகத்துக்கும் பலமுறை புகார் அளித்தும், நடவடிக்கை எடுக்கவில்லை' என்று, சி.ஐ.டி.யு., நிர்-வாகி சுப்பிரமணி தெரிவித்தார்.