/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கூடுதல் பணிக்கு நிர்பந்தம்: டிரைவர், கண்டக்டர் தர்ணா
/
கூடுதல் பணிக்கு நிர்பந்தம்: டிரைவர், கண்டக்டர் தர்ணா
கூடுதல் பணிக்கு நிர்பந்தம்: டிரைவர், கண்டக்டர் தர்ணா
கூடுதல் பணிக்கு நிர்பந்தம்: டிரைவர், கண்டக்டர் தர்ணா
ADDED : பிப் 01, 2024 11:58 AM
ஈரோடு: கூடுதல் பணிச்சுமைக்கு நிர்பந்தித்த கிளை மேலாளரை கண்டித்து, ஈரோடு அரசு போக்குவரத்து கழக கிளையில் இரவில் டிரைவர், கண்டக்டர் திடீர் தர்ணாவில் ஈடுபட்டனர்.
ஈரோடு, சென்னிமலை சாலை, காசிபாளையத்தில் அரசு போக்குவரத்து கழக ஈரோடு கிளை பணிமனை செயல்படுகிறது. இக்கிளையில் உள்ள கோவை - சேலம் வழித்தட பஸ்சை, டிரைவர் செந்தில்குமார், கண்டக்டர் வடிவேல் ஆகியோர் நேற்று முன்தினம் இயக்கினர். நேற்று இரவு, 12:00 மணிக்கு இவர்கள் பணியை முடித்து, கிளை பணிமனையில் பஸ்சை நிறுத்திவிட்டு, இருவரும் வீட்டுக்கு புறப்பட்டனர்.
அப்போது அங்கிருந்த கிளை மேலாளர், இவர்களை அழைத்து, 'சென்னிமலையில் கோவில் விழா நடப்பதால், ஈரோடு - சென்னிமலைக்கு பஸ்சை இயக்கும்படி' கூறினார். 'தாங்கள் முதல் நாள் அதிகாலை, 2:00 மணிக்கு பஸ்சை இயக்கத்துவங்கி நேற்று, 12:00 மணிக்கு ெஷட்டில் நிறுத்தியுள்ளோம். சோர்வாக உள்ளதாலும், உடல் நிலை சரி இல்லாததாலும் பஸ்சை இயக்க இயலவில்லை' என
தெரிவித்தனர்.
உடன் கிளை மேலாளர் பஸ்சை இயக்க வேண்டும் என்று கூறி அவதுாறாக பேசியுள்ளார். இதனால் மனமுடைந்த செந்தில்குமார், வடிவேல் ஆகியோர் கிளை மேலாளர் செயலை கண்டித்து, பணிமனை வளாகத்தில் தரையில் அமர்ந்து தர்ணாவில்
ஈடுபட்டனர்.
அப்போது அங்கிருந்த பிற அதிகாரிகள், பணிமனை ஊழியர்கள் வந்து இருவரிடமும் சமாதானம் பேசியதை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டனர்.
அங்குள்ள பணியாளர்கள் இந்நிகழ்வை வீடியோ பதிவு செய்து வெளியிட்டதால், போலீசார், தொழிற்சங்கத்தினர் விசாரிக்கின்றனர்.