/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சட்டசபை வாரியாக படிப்பகம் இளைஞரணி கூட்டத்தில் முடிவு
/
சட்டசபை வாரியாக படிப்பகம் இளைஞரணி கூட்டத்தில் முடிவு
சட்டசபை வாரியாக படிப்பகம் இளைஞரணி கூட்டத்தில் முடிவு
சட்டசபை வாரியாக படிப்பகம் இளைஞரணி கூட்டத்தில் முடிவு
ADDED : ஆக 15, 2024 07:01 AM
ஈரோடு: சட்டசபை தொகுதி வாரியாக, கலைஞர் நுாற்றாண்டு படிப்பகம் அமைப்பது என, ஈரோட்டில் நடந்த இளைஞரணி மண்டல கூட்டத்தில் முடிவு செய்தனர்.ஈரோட்டில், எம்.பி., அலுவலகத்தில் தி.மு.க., இளைஞரணி ஐந்தாம் மண்டல கூட்டம் நடந்தது.
மண்டல பொறுப்பாளர் எம்.பி., பிரகாஷ் தலைமை வகித்தார். ஐந்தாம் மண்டலத்துக்கு உட்பட்ட கிருஷ்ணகிரி, கரூர், திருப்பூர், கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மாநகர் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர்.சட்டசபை தொகுதி வாரியாக கலைஞர் நுாற்றாண்டு படிப்பகம் அமைப்பது. பேச்சு போட்டி நடத்துவது. அதிக எண்ணிக்கையில் இளைஞரணியில் உறுப்பினர்களை சேர்ப்பது. பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து, அதிகாரிகளிடம் கொண்டு சென்று தீர்வு காண்பது என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றினர். மாவட்ட அமைப்பாளர் சசிகுமார் நன்றி கூறினார்.