/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மரவள்ளி கிழங்கை வீதிகளில் கொட்டும் அவலத்துக்கு கண்டனம்
/
மரவள்ளி கிழங்கை வீதிகளில் கொட்டும் அவலத்துக்கு கண்டனம்
மரவள்ளி கிழங்கை வீதிகளில் கொட்டும் அவலத்துக்கு கண்டனம்
மரவள்ளி கிழங்கை வீதிகளில் கொட்டும் அவலத்துக்கு கண்டனம்
ADDED : டிச 14, 2024 03:01 AM
ஈரோடு: 'மரவள்ளி கிழங்குக்கு விலை இல்லாததால், வீதிகளில் கொட்டும் அவலம் ஏற்பட்டுள்ளது' என்று, தமிழ்நாடு விவசா-யிகள் சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் நல்லசாமி கண்-டனம் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசுக்கு அவர் அனுப்பிய கடிதத்தில் கூறியதாவது: தேசிய அளவில் தமிழகத்தில், மரவள்ளி கிழங்கு அதிகம் சாகு-படி செய்யப்படுகிறது. ஜவ்வரிசி, ஸ்டார்ச் ஆலைகளும் இங்-குதான் அதிகம் உள்ளன.கடந்தாண்டு ஒரு டன் மரவள்ளி கிழங்கு, 12,900 ரூபாய்க்கு மேலாக விற்பனையானது. சாகுபடி பரப்பும் உயர்ந்தது. தற்போது ஒரு டன், 6,000 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. தர்ம-புரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், சேலம் மாவட்டங்களில் அறுவ-டைக்கு தயாராக இருந்த மரவள்ளி கிழங்கு பயிரில் நீர் தேங்கி உள்ளது.
இச்சூழலிலும் கிழங்கை அறுவடை செய்த விவசாயிகள், சேகோ ஆலைகளுக்கு கொண்டு சென்றால், அடிமாட்டு விலைக்கும் கொள்முதல் செய்ய தயாராக இல்லை என்கின்றனர்.
விலை வீழ்ச்சி காலங்களில் தக்காளி, வெங்காயம் போன்றவை வீதிகளில் கொட்டுவதுபோல, மரவள்ளி கிழங்கை கொட்டி செல்-கின்றனர். இதுபோன்ற காலங்களில் சாகுபடி இலக்கை நிர்ண-யித்தும், பயிர் பாதிப்பின்போது அரசே விலையை நிர்ணயித்தும், கொள்முதலுக்கு வழிகளை ஏற்படுத்தி கொடுத்தும் உதவிட வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.