தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ 'பாசன சபைகளுக்கு தேர்தல் நடத்துங்க'

'பாசன சபைகளுக்கு தேர்தல் நடத்துங்க'

'பாசன சபைகளுக்கு தேர்தல் நடத்துங்க'


ADDED : அக் 11, 2024 01:17 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 11, 2024 01:17 AM


Follow on Google
அ நிறம் | அளவு

'பாசன சபைகளுக்கு

தேர்தல் நடத்துங்க'

ஈரோடு, அக். 11-

பாசன சபைகளுக்கு தேர்தலை நடத்த, தமிழ்நாடு சிறு மற்றும் குறு விவசாயிகள் சங்க மாநில தலைவர் சுதந்திரராசு, முதல்வர் ஸ்டாலினுக்கு அனுப்பிய மனுவில் கூறியதாவது:

தமிழகத்தில் பல்வேறு அணைகள், நீர் நிலைகளில் இருந்து பாசன சபைகளுக்கு, 2007க்கு பிறகு தேர்தல் நடத்தாததால், அப்போதைய நிர்வாகிகள் அல்லது அவர்களது வாரிசுகள் அல்லது அரசியல் அமைப்பு ஆதரவு உள்ளவர்கள் பொறுப்பு வகிக்கின்றனர்.

இதனால் பொதுப்பணித்துறை, நீர் வளத்துறை, வேளாண் துறையினர், விவசாயம், நீர் நிர்வாகம், பாசனம் தொடர்பான பிரச்னைகளுக்கு இவர்களை அழைத்து பேசுவதில், பாரபட்சம் காட்டும் நிலை ஏற்படுகிறது. பாசன சபைகளுக்கு முறையான தேர்தலை நடத்தி, நீர் நிர்வாகத்தை சீரமைத்தால் மட்டுமே, பாசனங்களையும், விவசாயிகளையும் காக்க முடியும்.

இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us