ADDED : அக் 25, 2024 12:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குட்கா பறிமுதல்; 2 பேர் கைது
பெருந்துறை, அக். 25-
பெருந்துறை போலீசார், நேற்று முன்தினம் மாலை, பெத்தாம்பாளையம் ரோட்டில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது டூவீலரில் மூட்டையுடன் இருவர் வந்தனர். விசாரணையில் துடுப்பதி, கல்லாகாடு ராஜ்குமார் மகன் ராகுல் கண்ணன், 24; சிங்கநல்லுார், பிள்ளையார் கோயில் வீதி சுப்பிரமணி மகன் கோகுல், 28, என தெரிந்தது. இருவரும் கொடுத்த தகவலின்படி, வெள்ளியம்பாளையத்தில் ஒரு தோட்டத்தில் விற்பனைக்காக மறைத்து வைத்திருந்த, 24 மூட்டை புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.