இரண்டு பெயரால் அரசு பள்ளியில் குழப்பம் ஈரோடு சி.இ.ஓ., நடவடிக்கை எடுப்பாரா?
இரண்டு பெயரால் அரசு பள்ளியில் குழப்பம் ஈரோடு சி.இ.ஓ., நடவடிக்கை எடுப்பாரா?
ADDED : செப் 09, 2026 07:17 AM

கோபி:கோபி-கொளப்பலுார்
சாலை ஓடக்காட்டூரில் செயல்பட்ட பஞ்சாயத்து யூனியன் துவக்கப்பள்ளி,
நடுநிலைப்பள்ளியாக தரம் உயர்ந்தது. பின் உயர் நிலைப்பள்ளியாக தரம்
உயர்த்தப்பட்டது. இதில் ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரை கொளப்பலுார்
அருகே பெருந்துறை சாலைக்கு இடமாற்றமானது.
அதேசமயம் ஒன்று முதல்
ஐந்தாம் வகுப்பு வரை இரு ஆசிரியைகளை கொண்டு, 30க்கும் மேற்பட்ட மாணவ,
மாணவியருடன், அதே இடத்தில் இயங்குகிறது.
உயர்நிலைப்பள்ளியாக
தரம் உயர்ந்து இடமாறினாலும், பழைய இடத்தில் பள்ளியின் முன்புள்ள
சுற்றுச்சுவரில் துவக்கப்பள்ளி எனவும், அதன் மேல் பகுதியில் அரசு
உயர்நிலைப்பள்ளி என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரே அரசு
பள்ளிக்கு இரு பெயர் பலகையால், ஓடக்காட்டூரில் இயங்குவது
துவக்கப்பள்ளியா அல்லது அரசு உயர்நிலைப்பள்ளியா என்ற குழப்பமும்
நீடிக்கிறது.
தவிர பள்ளி வளாகத்துக்குள் பல ஆண்டுகளுக்கு முன் பல
லட்சம் ரூபாய் செலவில் கட்டிய மூன்று வகுப்பறை கட்டடங்களில், இரு
கட்டடங்கள் பூட்டியும், மற்றொன்று பயன்பாடின்றி கிடக்கிறது. இதை
கண்காணிக்க வேண்டிய கல்வித்துறை அதிகாரிகள் அலட்சியமாக உள்ளனர்.
இதுகுறித்து ஈரோடு சி.இ.ஓ., மான்விழியிடம் கேட்டதற்கு, 'அது என்ன என்பதை நான் உடனே பார்க்கிறேன்' என்றார்.
