ADDED : செப் 22, 2024 04:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாராபுரம்: திருப்பூர் புறநகர் மாவட்ட காங்., சார்பில், தலைவர் தென்னரசு தலைமையிலான கட்சியினர், தாராபுரம் போலீஸ் ஸ்டேஷனில், நேற்று அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
தமிழக பா.ஜ., மாநில ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஹெச்.ராஜா, பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுலை, தேசத்துரோகி என கலவரத்தை துாண்டும் வகையில் கூறியுள்ளார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதேபோல் முன்னாள் டெல்லி எம்.எல்.ஏ., தர்விந்தர் சிங், உ.பி., மாநில அமைச்சர் ரகுராஜ் சிங் மீதும், தனித்தனியே புகாரளித்தனர். காங்., மாநில மகளிரணி துணை தலைவி கானப்பிரியா, நகர தலைவர் செந்தில்குமார் உள்பட பலர் உடன் இருந்தனர்.