/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
'எங்கிருந்தாலும் வாழ்க' தே.மு.தி.க.,வுக்கு வாழ்த்து
/
'எங்கிருந்தாலும் வாழ்க' தே.மு.தி.க.,வுக்கு வாழ்த்து
'எங்கிருந்தாலும் வாழ்க' தே.மு.தி.க.,வுக்கு வாழ்த்து
'எங்கிருந்தாலும் வாழ்க' தே.மு.தி.க.,வுக்கு வாழ்த்து
ADDED : பிப் 21, 2026 09:16 AM
கோபி: ''தி.மு.க.,வில் இணைந்த தே.மு.தி.க., எங்கிருந்தாலும் வாழ்க,'' என்று, த.வெ.க., நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் நேற்று கூறினார்.
ஈரோடு மாவட்டம் கோபியில், தன் ஆதரவாளர்களுடன் நேற்று வீடு வீடாக சென்று, கட்சி நோட்டீஸ், மற்றும் சின்னமான விசில் வழங்கி, பிரசாரத்தில் ஈடுபட்ட செங்கோட்டையன் கூறியதாவது:
தி.மு.க.,வுடன், தே.மு.தி.க., இணைந்தது, அவர்களுடைய விருப்பம். அது அவர்களுடைய உரிமை. எந்த இயக்கத்துக்கு வேண்டுமானாலும் செல்லலாம்; எங்கிருந்தாலும் வாழ்க. த.வெ.க., தலைவர் தான் கூட்டணி குறித்து முடிவு செய்வார். கோடை கால சிறப்பு நிதி என்பது, தேர்தல் கோடைகாலமாக இருக்கிறது. அ.தி.மு.க.,வில் இருந்து கூட்டணிக்கு வருவோர் குறித்து, எதையும் வெளிப்படையாக சொல்ல இயலாது. தேர்தல் அறிக்கையை த.வெ.க., தலைவர் ஆய்வு செய்து வருகிறார். இவ்வாறு கூறினார்.