தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ நிபந்தனை பட்டாவில் மாற்றம் செய்ய ஆன்லைனில் விண்ணப்பிக்க அறிவுரை

நிபந்தனை பட்டாவில் மாற்றம் செய்ய ஆன்லைனில் விண்ணப்பிக்க அறிவுரை

நிபந்தனை பட்டாவில் மாற்றம் செய்ய ஆன்லைனில் விண்ணப்பிக்க அறிவுரை


ADDED : பிப் 21, 2026 09:16 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 21, 2026 09:16 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: கீழ்பவானி திட்ட நிபந்தனை பட்டாவை, தங்கள் பெயருக்கான பட்டாவாக மாற்ற, ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும், என ஈரோடு கலெக்டர் கந்தசாமி, டி.ஆர்.ஓ., சாந்தகுமார் தெரிவித்தனர்.

மேலும் அவர்கள் கூறியதாவது: கீழ்பவானி பாசன திட்டத்துக்காக நிலம் வழங்கி, நிபந்தனை பட்டாவாக உள்ள பிற நிலங்களுக்கு, நிலம் வழங்கியவர் பெயரில் பட்டா வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களில், 70 கிராமங்களை சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் நிபந்தனை பட்டாவாக இருந்தால், ஆன்லைனில் விண்ணப்பித்து மாற்றம் செய்து கொள்ளலாம். ஆன்லைனில் விண்ணப்பிக்க தெரியாதவர்கள், அந்தந்த பகுதி வி.ஏ.ஓ., அலுவலகத்துக்கு உரிய ஆவணங்களுடன் சென்று விண்ணப்பிக்கலாம். ஈரோடு மாவட்டத்தில் இதுவரை, 750 விண்ணப்பம் வரப்பெற்றுள்ளது. அந்தியூர் பகுதி நிபந்தனை பட்டா என்பது வேறு வகையானது.

அதற்காக தனி அரசாணை பெறப்பட்டுள்ளதால், அப்பகுதியினருக்கு மட்டும் அந்த அரசாணை பொருந்தும். அதுபோல, ஈரோடு உட்பட சில பகுதியில் சர்க்கார் மனை நிறுத்தம் பெயரில் உள்ள நிலங்களுக்கு பட்டா வழங்கும் பணி நடந்து வருகிறது. அவ்வாறு, 4,500 பேருக்கு விண்ணப்பம் பெற்று, அரசுக்கு அனுப்பி உள்ளோம். அடுத்த, 15 நாளில் மேலும், 3,000 பேருக்கு அரசுக்கு அனுப்ப உள்ளோம்.

இம்மூன்றும் வேறு வேறு வகை பட்டா பிரச்னை. இன்னும் சில இடங்களில் வேறு காரணத்துக்காக நிபந்தனை பட்டாவாக இருக்கும். அவ்வாறானவர்கள், இவற்றில் விண்ணப்பித்தால், அம்மனு தள்ளுபடியாகும். தவிர அரசாணைப்படி குறிப்பிட்ட காலத்துக்குள் விண்ணப்பித்தால் மட்டுமே, உடனடியாக தீர்வு காண முடியும். இவ்வாறு கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us