'நீட்' தேர்வு எதிர்ப்பு குறித்து காங்., விழிப்புணர்வு பயிற்சி
'நீட்' தேர்வு எதிர்ப்பு குறித்து காங்., விழிப்புணர்வு பயிற்சி
ADDED : ஜூன் 27, 2026 01:17 AM

ஈரோடு; ஈரோடு மாநகர் மாவட்ட காங்., அலுவலகத்தில், 'நீட்' தேர்வு எதிர்ப்பு குறித்த விழிப்புணர்வு பயிற்சி மாணவர் காங்., நிர்வாகிகள் மற்றும் பள்ளி, கல்-லுாரி மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. மாநகர் மாவட்ட காங்., தலைவர் ராஜேஷ் ராஜப்பா தலைமை வகித்து பேசினார்.
'
என்.டி.ஏ.,' நடத்தும் 'நீட்' தேர்வு உட்பட அனைத்து தேர்வில் பல லட்சம் செலவிட்டு பயிற்சி பெறு-வோரில், 3,000 பேரில், 11 பேர் கூட ஐ.ஏ.எஸ்., ஆவதில்லை. 80 பேர் கூட 'நீட்' தேர்வில் தேர்ச்சி பெறுவதில்லை. எட்டாம் வகுப்புக்கு முன்பே 'நீட்' தேர்வு பயிற்சி துவங்குவதால், கல்வி பாதிக்கி-றது. இதை வலியுறுத்தி, எம்.பி., ராகுல், தேசிய அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தி, விரைவில் 'கோட்டா பேரணி' நடத்த உள்ளார். இந்த இயக்கத்தில் இணைந்து அனைவரும் தங்கள் விழிப்புணர்வு கருத்தை பதிவு செய்-யலாம் என்றார். முன்னாள் மாவட்ட தலைவர் திருச்செல்வம், நிர்வாகிகள் தீபா, விஜயபாஸ்கர், புனிதன், அர்ஷத், பாஷா உட்பட பலர் பங்கேற்-றனர்.
இதேபோல் ஈரோடு வடக்கு மாவட்ட காங்., சார்பில், கோபியில் உள்ள கட்சி அலுவலகத்தில், நீட் தேர்வு குறித்த விழிப்புணர்வு கூட்டம், மாவட்ட தலைவர் உதயகுமரன் தலைமையில் நடந்தது. மாநில பொதுக்குழு உறுப்பினர்கள், வட்டார, நகர தலைவர்கள், சார்பு அமைப்பு மாவட்ட தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர்.
