ADDED : ஜூன் 27, 2026 01:18 AM
அ நிறம் | அளவு
கொடுமுடி; கொடுமுடி, பழைய படித்துறை, காளியம்மன் கோவில் அருகே வசிப்பவர் சிவலிங்கம், 59; மொத்த மருந்து விற்பனை நிறுவன ஊழியர். இவரின் மனைவி கவிதா, 49; கொடுமுடி தனியார் மருத்துவமனை கூலி தொழிலாளி. ஒவ்வொரு மாதமும் சம்பள பணத்தை பெற்றதும் சிவ-லிங்கம், சில நாட்களுக்கு வெளியே சென்று-விட்டு வீடு திரும்புவார்.
இடையில் சில நாட்க-ளிலும் வெளியூர் சென்றுவிட்டு, சில நாட்களுக்கு பின் திரும்புவது வழக்கம். கடந்த, 21ல் வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. கடந்த, 25ல் கொடுமுடி பழைய படித்துறை காளியம்மன் கோவில் அருகே காவிரி ஆற்றில் பிணமாக மிதந்தார். கொடுமுடி போலீசார் மீட்டு, பெருந்-துறை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவம-னைக்கு அனுப்பி வைத்தனர்.
