தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ கட்சி தலைவர் தேர்வு காங்., ஆலோசனை

கட்சி தலைவர் தேர்வு காங்., ஆலோசனை

கட்சி தலைவர் தேர்வு காங்., ஆலோசனை


ADDED : நவ 26, 2025 01:31 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 26, 2025 01:31 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு, ஈரோடு வட்டார காங்., சார்பில், புதிய மாவட்ட தலைவரை தேர்வு செய்வது குறித்த ஆலோசனை கூட்டம், முன்னாள் வட்டார தலைவர் நடராஜ் தலைமையில் நேற்று நடந்தது. இதில் அகில இந்திய காங்., மேலிட பார்வையாளர் லோபோ பேசியதாவது:

கிராமம், வட்டாரம், மாவட்ட அளவில் கட்சியினரை சந்தித்து மாவட்ட தலைவரை தேர்வு செய்வது பற்றி பேசி, விண்ணப்பம் பெறுகிறோம். கட்சியை பலப்படுத்த, யாரை மாவட்ட தலைவராக நியமிக்கலாம், என கருத்தை கூறலாம். சாமானிய தொண்டர்களும் மாவட்ட தலைவராகலாம்.

இவ்வாறு பேசினார்.

* கோபியில் உள்ள கட்சி அலுவலகத்துக்கும் லோபா நேற்று சென்றார். நிர்வாகிகள் மத்தியில், ஈரோடு வடக்கு மாவட்ட தலைவரை தேர்வு செய்வது குறித்து பேசினார். நிகழ்வில் ஈரோடு வடக்கு மாவட்ட தலைவர் சரவணன் உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us