ADDED : ஏப் 07, 2025 02:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: கட்டாய இந்தி திணிப்பு, புயல், வெள்ளம், பேரிடர் நிவாரண நிதி ஒதுக்காதது, நீட் தேர்வு ரத்து செய்யாதது, நுாறு நாள் வேலை வாய்ப்பு, மெட்ரோ, கல்வி நிதி உட்பட தமிழகத்துக்கு கொடுக்க வேண்டிய நிதி தராமல், தமிழகத்துக்கு நேற்று வந்த பிரதமர் மோடியை எதிர்த்து, ஈரோடு மாவட்ட காங்., சார்பில், கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாநகர் மாவட்ட தலைவர் திருச்செல்வம் தலைமை வகித்தார். வடக்கு மாவட்ட தலைவர் சரவணன், மண்டல தலைவர் ஜாபர் சாதிக், துணை தலைவர் ராஜேஷ் ராஜப்பா, கவுன்சிலர் ரவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதேபோல் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பழைய நகராட்சி அலுவலகம் அருகே, மாவட்ட காங்., தலைவர் தென்னரசு தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.