/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பொது சுத்திகரிப்பு நிலைய கட்டும் பணி; சிப்காட்டில் 10 மாதமாகியும் தொடங்கல

ADDED : செப் 06, 2024 07:36 AM
பெருந்துறை: பெருந்துறை சிப்காட்டில் உள்ள, மாசு கட்டுப்பாடு வாரிய அலுவலகத்தில், மாதாந்திர மக்கள் குறைகேட்பு கூட்டம் நேற்று நடந்தது.
மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் சுவாமிநாதன், உதவி சுற்றுச்சூழல் பொறியாளர் ஜோதி பாஸ்கரன் கலந்து கொண்டனர். சிப்காட்டால் பாதிக்கப்பட்ட மக்கள் நலச் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சின்னசாமி மற்றும் சங்க உறுப்பினர்கள், மக்கள் கலந்து கொண்டனர்.கடந்த, 2023 நவ.,௨௧ல் அமைச்சர் உதயநிதி துவக்கி வைத்த, 40- கோடி ரூபாய் மதிப்பிலான பொது சுத்திகரிப்பு நிலைய பணிகளை விரைவில் தொடங்கி, செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.
சிப்காட் கழிவு நீர் பாலதொழுவு குளம் சென்றடைகிறது. இத்தண்ணீரில், 4,000 டி.டீ.எஸ்., அளவு மாசு இருப்பதாக தெரிய வருகிறது. தற்போது அத்திக்கடவு- அவிநாசி திட்டத்தில், பால தொழுவு குளத்துக்கு தண்ணீர் வருகிறது. இதில் கழிவுநீர் கலப்பதை தடுக்க நிறுத்த வேண்டும். சிப்காட் வளாக ஆலைகளில், பூஜ்ய திரவ சுத்திகரிப்பு முறையில், கழிவு நீர் சுத்திகரிப்பு செய்யப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும். இதை மீறும் தொழிற்சாலைகள் மீது பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை வலியுறுத்தப்பட்டது.