/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மூதாட்டியிடம் பலாத்கார முயற்சி விபரீத கட்டட தொழிலாளி கைது
/
மூதாட்டியிடம் பலாத்கார முயற்சி விபரீத கட்டட தொழிலாளி கைது
மூதாட்டியிடம் பலாத்கார முயற்சி விபரீத கட்டட தொழிலாளி கைது
மூதாட்டியிடம் பலாத்கார முயற்சி விபரீத கட்டட தொழிலாளி கைது
ADDED : செப் 03, 2025 12:57 AM
ஈரோடு, :ஈரோடு அருகே முள்ளாம்பரப்பு, நாதகவுண்டன்பாளையம், செக்குமேடு பகுதியை சேர்ந்த, 70 வயது மூதாட்டி, ஈரோடு எஸ்.பி., சுஜாதாவிடம் நேற்று அளித்த புகார் மனு: கடந்த, 30ம் தேதி இரவு நானும், 53 வயது மகளும் வீட்டில் துாங்கி கொண்டிருந்தோம். நள்ளிரவில் அத்துமீறி நுழைந்த அதே பகுதியை சேர்ந்த கட்டட தொழிலாளி ஜீவா, 32, பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார்.
நான் சத்தமிடவே அக்கம்பக்கத்தினர் வந்ததால் ஓடி விட்டான். இதுகுறித்து போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தோம். அவர்கள் அறிவுறுத்தலின்படி ஈரோடு தாலுகா போலீசில் புகாரளித்தேன். ஏற்கனவே இரண்டு முறை பலாத்காரம் செய்ய முயன்றான்.
இதுகுறித்து தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. ஏற்கனவே அப்பகுதியில் மூதாட்டி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றுள்ளான். உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்திருந்தார். எஸ்.பி., அறிவுறுத்தலை தொடர்ந்து, ஈரோடு தாலுகா போலீசார் ஜீவாவை கைது செய்தனர்.