ADDED : ஜூலை 22, 2026 06:22 AM
அ நிறம் | அளவு
கோபி:நம்பியூர்
அருகே எலத்துாரை சேர்ந்தவர் சதீஸ்குமார், 31, கட்டட தொழிலாளி;
உறவினரின், 14 வயது மகளை கடந்த ஜூன் மாதம் கடத்தி சென்று திருமணம்
செய்து கொண்டார்.
தகவலறிந்த நம்பியூர் யூனியன் ஊர் நல பெண் அலுவலர்,
கோபி அனைத்து மகளிர் போலீசில் புகாரளித்தார். விசாரித்த போலீசார்,
சதீஸ்குமாரை நேற்று கைது செய்தனர். திருமணமான சதீஸ்குமார், மனைவியை
பிரிந்து வாழ்ந்துள்ளார். அதேசமயம் பாதிக்கப்பட்ட சிறுமி, பத்தாம்
வகுப்பு படிப்பதும் தெரியவந்தது. மருத்துவ பரிசோதனைக்கு பின், பெற்றோரிடம் சிறுமி
ஒப்படைக்கப்படுவார் என்று, போலீசார் தெரிவித்தனர்.
