ADDED : ஜூலை 22, 2026 06:22 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோடு
நேதாஜி வீதியை சேர்ந்தவர் மனோஜ், 30; தொட்டம்பட்டி டாஸ்மாக் கடை அருகே
நண்பருடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது வந்த ஈரோடு
வில்லரசம்பட்டி நால்ரோடு தொட்டம்பட்டியை சேர்ந்த சூர்யா, 31, தான்
ரவுடி என்று கூறி, கத்தியை காட்டி மிரட்டி, 1,000 ரூபாய் கேட்டுள்ளார்.
புகாரின்படி சூர்யாவை போலீசார் கைது செய்தனர். இவர் மீது ஏற்கனவே ஒன்பது வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
