ADDED : நவ 11, 2026 07:30 AM
அ நிறம் | அளவு
கோபி:டி.என்.
பாளையம், எரங்காட்டூர் அருகே கரும்பாறையை சேர்ந்தவர் சந்தோஷ், 19;
கட்டட தொழிலாளி; கடந்த, 8ம் தேதி மதியம், கரும்பாறையில் உள்ள
தடுப்பணையில் நண்பர்களுடன் குளிக்க சென்றார்.
எதிர்பாராதவிதமாக
தண்ணீரில் மூழ்கிய சந்தோஷ் அன்றிரவு முழுவதும் தேடியும்
கிடைக்கவில்லை. மறுநாள் சடலமாக மீட்கப்பட்டார். பலியான சந்தோஷின்
தந்தை சடையன் புகாரின்படி, பங்களாப்புதுார் போலீசார்
விசாரிக்கின்றனர்.
