/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தே.மு.தி.க., சார்பில் ஆலோசனை கூட்டம்
/
தே.மு.தி.க., சார்பில் ஆலோசனை கூட்டம்
ADDED : செப் 25, 2024 01:45 AM
தே.மு.தி.க., சார்பில்
ஆலோசனை கூட்டம்
பவானி, செப். 25-
அந்தியூரில் அடுத்த மாதம் நடக்கவுள்ள தே.மு.தி.க., முப்பெரும் விழா பொதுக்கூட்டம் குறித்த ஆலோசனை கூட்டம், தே.மு.தி.க., சார்பில் நடந்தது. அவைத் தலைவர் ரமேஷ்குமார் வரவேற்றார்.
ஒன்றிய செயலாளர் சுதாகர் தலைமை வகித்து ஆலோசனை வழங்கினார். விஜய பிரபாகரன் சிறப்பு விருந்தினராக கலந்து பங்கேற்ற வேண்டும் என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர் கொடி மோகன், பொருளாளர் பழனிச்சாமி, ஐ.டி.பிரிவு மாவட்ட துணை செயலாளர் நரசிம்மமூர்த்தி, கேப்டன் மன்ற செயலாளர் பழனிச்சாமி, மாவட்ட நிர்வாகி சிவலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நகர செயலாளர் முனாப் நன்றி கூறினார்.