/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தீரன் சின்னமலை விழா ஏற்பாடு குறித்து ஆலோசனை
/
தீரன் சின்னமலை விழா ஏற்பாடு குறித்து ஆலோசனை
ADDED : ஜூலை 29, 2025 01:38 AM
ஈரோடு, அரச்சலுாரை அடுத்த ஓடாநிலையில் ஆக.,3ல் சுதந்திர போராட்ட வீரன் தீரன் சின்னமலை நினைவு நாள் ஆடிப்பெருக்கு விழா நடக்க உள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த கூட்டம் கலெக்டர் கந்தசாமி தலைமையில் நேற்று நடந்தது.
எஸ்.பி., சுஜாதா, டி.ஆர்.ஓ., சாந்தகுமார் முன்னிலை வகித்தனர். கடந்தாண்டுகளை போல ஒவ்வொரு கட்சிகள், அமைப்புகள் சார்பில் மரியாதை செலுத்த நேரம் ஒதுக்கீடு செய்ய வேண்டும். அரசு சார்பில் துறை ரீதியான ஸ்டால்களுடன், கலை நிகழ்ச்சி, மேடை நிகழ்ச்சி நடத்தப்படும். மணிமண்டபத்துக்கு வரும் வாகனங்கள், செல்லும் வாகனங்களுக்கான ஒரு வழிப்பாதையை ஏற்படுத்த வேண்டும், என்பது உட்பட பல்வேறு யோசனை தெரிவிக்கப்பட்டது.

