/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தேர்தல் செலவின கணக்கு கட்சியினருடன் ஆலோசனை
/
தேர்தல் செலவின கணக்கு கட்சியினருடன் ஆலோசனை
ADDED : மார் 08, 2024 07:21 AM
ஈரோடு: விரைவில் நடக்க உள்ள லோக்சபா தேர்தல் செலவின கணக்குகளை அரசியல் கட்சியினர், வேட்பாளர்கள் எவ்வாறு வைத்து கொள்ள வேண்டும் என்பது தொடர்பான ஆலோசனை கூட்டம், ஈரோட்டில் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் நடந்தது. டி.ஆர்.ஓ., சாந்தகுமார் முன்னிலை வகித்தார். அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
பொது இடத்தில் பொதுக்கூட்டம் நடத்துவது, அரங்க நிகழ்வு, தலைவர்கள் பிரசாரம், உணவு, வாகன வாடகை, நாற்காலி, மேடை அமைத்தல், மின் விளக்கு, டீ, காபி உள்ளிட்ட செலவு குறித்து கருத்துக்களை தெரிவிக்க அழைப்பு விடப்பட்டது. இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் நிர்ணயித்துள்ள விலை பட்டியல், தற்போதைய விலை நிலவரம் குறித்து கட்சியினர் தெரிவித்தனர். தேர்தல் அறிவிப்பின்போது, இறுதி விலை பட்டியல் வெளியிடப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

