/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தொடர் காத்திருப்பு போராட்டம் பேச்சுவார்த்தையால் ஒத்திவைப்பு
/
தொடர் காத்திருப்பு போராட்டம் பேச்சுவார்த்தையால் ஒத்திவைப்பு
தொடர் காத்திருப்பு போராட்டம் பேச்சுவார்த்தையால் ஒத்திவைப்பு
தொடர் காத்திருப்பு போராட்டம் பேச்சுவார்த்தையால் ஒத்திவைப்பு
ADDED : செப் 18, 2025 01:37 AM
ஈரோடு : இழப்பீடு தொடர்பாக, ஈரோடு கலெக்டர் கந்தசாமி தலைமையில், சிப்காட்டால் பாதிக்கப்பட்ட மக்கள் நலச்சங்க பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடந்தது.
டி.ஆர்.ஓ., சாந்தகுமார், ஆர்.டி.ஓ., சிந்துஜா, டி.எஸ்.பி., முத்துகுமரன், பெருந்துறை தாசில்தார் ஜெகநாதன், சிப்காட் திட்ட அலுவலர் சுஜா பிரியதர்ஷினி உட்பட பலர் பங்கேற்றனர்.
சிப்காட்டால் பாதிக்கப்பட்ட மக்கள் நலச்சங்கம் சார்பில் ஒருங்கிணைப்பாளர்கள் சின்னசாமி, பொன்னையன், சண்முகம், மணி உட்பட பலர் பங்கேற்றனர்.
பேச்சுவார்த்தை நிறைவில் கலெக்டர் உறுதிமொழி அளித்தார். இதன்படி, சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், சிப்காட்டுக்கு நிலம் வழங்கியவர்களுக்கான இழப்பீடு தொகை, வட்டியுடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்ட நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவில் பதிலுரைகள் தாக்கல் செய்து, மக்கள் நீதிமன்றத்தில் தீர்வு காண்பது. இழப்பீடு தொகையை மறுநிர்ணயம் செய்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை பரிசீலித்து, அரசுக்கு அனுப்பி நடவடிக்கை எடுப்பது என,
உறுதிமொழி அளித்தார்.இதை தொடர்ந்து ஈரோடு ஆர்.டி.ஓ., அலுவலகத்தில், இன்று (18) நடத்த திட்டமிடப்பட்ட தொடர் காத்திருப்பு போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.