/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சென்னிமலையில் தொடர் மழை கைத்தறி தொழில் முடக்கம்
/
சென்னிமலையில் தொடர் மழை கைத்தறி தொழில் முடக்கம்
ADDED : நவ 21, 2024 01:32 AM
சென்னிமலையில் தொடர் மழை
கைத்தறி தொழில் முடக்கம்
சென்னிமலை, நவ. 21-
வட கிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், கைத்தறி உபகரணங்களை இயக்க முடியாமல் நெசவு தொழில் முடங்கி உள்ளது.
சென்னிமலை பகுதியில், தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இப்பகுதியில் கைத்தறி நெசவு தொழில் பிரதானமாக உள்ளது.
இங்கு, 36 கைத்தறி கூட்டுறவு சங்கங்கள் செயல்படுகின்றன. 3,000க்கும் மேற்பட்ட குடும்பங்கள், உறுப்பினராக இருந்து கைத்தறி நெசவு தொழில் செய்து வருகின்றனர்.
கைத்தறியின் அனைத்து உபகரணங்களும், மரத்தால் செய்யப்பட்டுள்ளதால். ஈரப்பதம் அதிகமாக இருப்பதால், அவற்றை இயக்க முடியாத நிலை ஏற்படுகிறது. மேலும், நெய்து முடித்த போர்வைகளை, ஈரப்பதத்தோடு மடிக்க முடியாது. அதனாலயே, மழைக்காலத்தில் நெசவு பணிகள் சிக்கலாகிறது. தற்போது பெய்து வரும் பருவ மழையால், நெசவு பணிகள் முடங்கி சில நாட்களாக வருமானம் குறைந்து நெசவாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நாள் முழுவதும் பணியில் ஈடுபட்டாலும் அதிகபட்சமாக, 350 முதல் 400 ரூபாய் வரை கூலியாக பெற முடியும். இந்நிலையில், சில நாட்களாக தொடர்ந்து இடைவிடாது மழை பெய்து வருவதால், நெசவு உபகரணங்கள் ஒத்துழைப்பு இன்றி, பணி முடங்கி கிடக்கின்றன. தொழில் முடங்கியுள்ளதால். தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளபடி, மழை காலத்தில் நிவாரண உதவித்தொகை வழங்க வேண்டும் என, நெசவாளர்கள் பெரிதும் எதிர்பார்க்கின்றனர்.

