தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ முடிவுக்கு வந்த ஒப்பந்த பணியாளர் போராட்டம்

முடிவுக்கு வந்த ஒப்பந்த பணியாளர் போராட்டம்

முடிவுக்கு வந்த ஒப்பந்த பணியாளர் போராட்டம்


ADDED : ஜூன் 20, 2026 05:53 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 20, 2026 05:53 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு:ஈரோடு அரசு மருத்துவமனை உட்பட, 12 மருத்துவமனை, மருத்துவ கல்லுாரிகளில் பணி செய்யும் ஒப்பந்த அடிப்படையிலான துாய்மை பணியாளர்கள், காவலர்களுக்கு ஊதியம், பணிச்சுமை குறித்த கோரிக்கைக்காக நேற்று முன்தினம் வேலை நிறுத்தத்துடன், காத்திருப்பு போராட்டம் நடத்தினர். இந்நிலையில் நேற்று இரவு, கிரிஸ்டல் என்ற ஒப்பந்த நிறுவன நிர்வாகிகள் வினோத், விவேக், அரசு மருத்துவமனை உறைவிட மருத்துவர் சசிரேகா, சங்க மாவட்ட தலைவர் சின்னசாமி மற்றும் நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஏப்., - மே மாதங்களில் பணியாளர்களுக்கு குறைவாக வழங்கப்பட்ட ஊதிய நிலுவையை வழங்குதல். ஒப்பந்தப்படி அரசு நிர்ணயித்த ஊதியத்தை முழுமையாக, குறித்த தேதிக்குள், ரசீதுடன் வழங்குதல். சீருடை, அடையாள அட்டை, டைம் கார்டு போன்ற சட்டப்படியான நலன்களை வழங்குதல் போன்றவற்றை ஒப்பந்த நிறுவனம் ஏற்றது. இதை தொடர்ந்து போராட்டம் விலக்கி கொள்ளப்பட்டு, அனைவரும் பணிக்கு திரும்பினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us