/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
நந்தா பொறியியல், தொழில்நுட்ப கல்லுாரிகளின் பட்டமளிப்பு விழா
/
நந்தா பொறியியல், தொழில்நுட்ப கல்லுாரிகளின் பட்டமளிப்பு விழா
நந்தா பொறியியல், தொழில்நுட்ப கல்லுாரிகளின் பட்டமளிப்பு விழா
நந்தா பொறியியல், தொழில்நுட்ப கல்லுாரிகளின் பட்டமளிப்பு விழா
ADDED : டிச 22, 2024 01:33 AM
நந்தா பொறியியல், தொழில்நுட்ப
கல்லுாரிகளின் பட்டமளிப்பு விழா
ஈரோடு டிச. 2௨-
''பொறியியல் பட்டதாரிகள் புதுமைகளை உருவாக்கி, வேலை வழங்கு
பவர்களாக மாற வேண்டும்,'' என்று மத்திய அறிவியல் தொழில்நுட்ப அமைச்சக அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை விஞ்ஞானி சசிகுமார் பேசினார்.
பெருந்துறை அருகேயுள்ள நந்தா பொறியியல் கல்லுாரியின், 19வது பட்டமளிப்பு விழா மற்றும் நந்தா தொழில்நுட்பக் கல்லுாரி, ௧3வது பட்டமளிப்பு விழா நடந்தது. கல்லுாரி சேர்மன் சண்முகன், செயலர்கள் நந்தகுமார் பிரதீப், திருமூர்த்தி, முதல்வர்கள் ரகுபதி, நந்தகோபால் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினராக பங்கேற்ற சசிகுமார், நந்தா பொறியியல் கல்லுாரியின், 797 இளங்கலை, முதுகலை பட்ட சான்றிதழ்களையும், நந்தா தொழில்நுட்பக் கல்லுாரி மாணவர்களுக்கு, 191 பட்டங்களையும் வழங்கினார். அவர்களில், 46 மாணவர்கள் பல்கலை தரவரிசையில் உள்ளனர். விழாவில் சசிகுமார் பேசியதாவது: நாட்டின் உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு பொறியாளர்கள் அவசியம். இதனால் மத்திய அரசு இந்தியாவை, 2047ல் வளர்ந்த நாடாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. எனவே இளைஞர்களின் கண்டுபிடிப்பு, ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. மத்திய அமைச்சகம் நாட்டில், 1,000 இன்குபேஷன் மையங்களை நடத்துகிறது, அவற்றில், 70 சதவீதம் மத்திய அரசால் நிதியளிக்கப்பட்டது. மீதி கார்ப்பரேட்களால் நிதி வழங்கப்பட்டவை. மாணவர்கள் வேலை தேடுபவர்களாக மாறாமல், வேலை வழங்குபவர்களாக மாற வேண்டும். பொறியாளர்கள் சமூகத்துக்காக உழைக்க தங்களை உருவாக்கி கொள்ள வேண்டும். தங்கள் துறைகளில் சிறந்து விளங்க பாடுபட வேண்டும். இவ்வாறு பேசினார்.