/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சமையல் காண்ட்ராக்டர் நெஞ்சுவலியால் சாவு
/
சமையல் காண்ட்ராக்டர் நெஞ்சுவலியால் சாவு
ADDED : மே 10, 2024 07:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பவானி : ஈரோடு, 46 புதுார், நாதகவுண்டன்பாளையத்தை சேர்ந்தவர் பாபு, 55, சமையல் காண்ட்ராக்டர்.
பவானி அருகே அம்மாபேட்டையில் ஒரு திருமண மண்டபத்தில், 25 பேருடன், நேற்று முன்தினம், சமையல் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது நெஞ்சு வலிப்பதாக கூறிய பாபுவை, அம்மாபேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு ஈரோடு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இதுகுறித்து அம்மாபேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.