/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
டாஸ்மாக் கடையில் தாக்கப்பட்ட சமையல் மாஸ்டர் பரிதாப சாவு
/
டாஸ்மாக் கடையில் தாக்கப்பட்ட சமையல் மாஸ்டர் பரிதாப சாவு
டாஸ்மாக் கடையில் தாக்கப்பட்ட சமையல் மாஸ்டர் பரிதாப சாவு
டாஸ்மாக் கடையில் தாக்கப்பட்ட சமையல் மாஸ்டர் பரிதாப சாவு
ADDED : மே 24, 2025 01:56 AM
பவானி பவானியை அடுத்த ஓலகடத்தை சேர்ந்தவர் சங்கர், 36; சமையல் மாஸ்டர். கடந்த, 8ம் தேதி இரவு வேலை முடிந்து, மது குடிக்க மயிலம்பாடியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்றார். மது வாங்கி கொண்டு வெளியில் நின்றிருந்தார். அப்போது போதையில் வந்த நான்கு பேர், சங்கரிடம் தீப்பெட்டி கேட்டுள்ளனர். தீப்பெட்டி இல்லை என்றதால், நான்கு பேரும் சங்கரை சரமாரியாக தாக்கினர். பவானி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், விசாரித்த பவானி போலீசாரிடம், சங்கர் புகார் கொடுத்தார்.
இதன் அடிப்படையில் விசாரித்த போலீசார், பவானி, சோலையம்பாளையம் மணிகண்டன், 23; பவானி, பழனிபுரம் முதல் வீதி பரத், 24; பவானி, சாணார்பாளையம் தினேஷ், 23; கூனாக்காபாளையம் நந்தகோபால், 25, ஆகியோரை கைது செய்து, பவானி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பவானி கிளை சிறையில் அடைத்தனர். அதேசமயம் மேல் சிகிச்சைக்காக, சேலம் அரசு மருத்துவமனைக்கு சங்கர் அனுப்பி வைக்கப்பட்டார். இந்நிலையில் சங்கர் நேற்று மாலை இறந்தார். கைதான நான்கு பேர் மீதும், அடிதடி வழக்கு என்று பதிவு செய்த போலீசார், தற்போது கொலை வழக்காக மாற்றி பதிவு செய்துள்ளனர்.