/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கூட்டுறவு வங்கி நகை கையாடல் வழக்கு பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்ற திட்டம்

ADDED : நவ 05, 2025 12:57 AM
ஈரோடு, ஈரோடு முனிசிபல் காலனி கூட்டுறவு நகர வங்கியில். ௮.௨௫ கிலோ தங்க நகை கையாடல் செய்யப்பட்டது.
இது தொடர்பாக வங்கி நகை மதிப்பீட்டாளர் ரமேஷ்குமார், 45. வங்கி மேலாளர் கதிரவன், 55, ஆக்டிங் டிரைவர் செந்தில்குமார் என மூவரை ஈரோடு கிரைம் போலீசார் கைது செய்தனர். ௮.௨௫ கிலோ நகையும் மீட்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். இந்த நகையில், 91.2 கிராம் போலி என்பதும், ஊழியர்களே கையாடல் செய்ததும் தெரிந்ததால், வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இவ்வழக்கை விரிவாக விசாரிக்க, பொருளாதார
குற்றப்பிரிவில் ஒப்படைக்க, ஈரோடு மாவட்ட போலீசார் முடிவு செய்து, அதற்கான பணிகளை துவக்கி உள்ளனர். இதுகுறித்து போலீசார்
கூறியதாவது: பொருளாதார குற்றப்பிரிவினர் விசாரிக்கும் பட்சத்தில், கையாடல்
விவகாரத்தில் யார் யாருக்கு தொடர்புள்ளது. எத்தனை ஆண்டாக இந்த செயல் நடக்கிறது என தெரிய வரும். வழக்கு விசாரணையும் விரைவு பெறும். தவறு செய்தவர்களுக்கும் தண்டனையை விரைவாக சிறப்பு நீதிமன்றத்தில் பெற்று தர
இயலும்.
இவ்வாறு கூறினர்.