ADDED : நவ 05, 2025 12:57 AM
ஈரோடு, ஈரோடு கருங்கல்பாளையம் கே.ஏ.எஸ் நகர் செந்தில் கார்டனை சேர்ந்தவர் வடிவேல், 42; பெயிண்டர். இவருக்கு மனைவி, திருமணமான ஒரு மகள், மகன் உள்ளனர். மதுப்பழக்கம் இருப்பதால், சரிவர வேலைக்கு செல்லாததால், மனைவியிடம் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. மனைவியை பிரிந்து ஒரு மாதமாக வீரப்பன்சத்திரம் மல்லி நகரில் ஹவுசிங் போர்டில் தனியாக வசித்து வந்தார். நேற்று முன்தினம் மின்விசிறியில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வீரப்பன்சத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
* ஈரோடு சூரம்பட்டி வலசு அணைக்கட்டு பகுதியை சேர்ந்தவர் மாதையன், 76, மது பழக்கம் உடையவர். ரத்த அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னை இருந்தது. கடந்த, 27ல் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். ஈரோடு அரசு மருத்துவமனையில் உள் நோயாளியாக சிகிச்சை பெற்று வந்தவர் நேற்று முன்தினம் இறந்தார்.

