ADDED : ஜன 02, 2025 01:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெருந்துறை, ஜன. 2-
பெருந்துறை வேளாண்மை பொருள்கள் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், ரூ.1.62 கோடிக்கு கொப்பரை ஏலம் நடந்தது.
பெருந்துறை சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், 2,894  மூட்டைகளில், ஒரு லட்சத்து, 20 ஆயிரம் கிலோ கொப்பரையை விற்பனைக்கு கொண்டு வந்தனர். முதல் தரம் கொப்பரை குறைந்தபட்சமாக கிலோ, 127.15, அதிகபட்சமாக, 151.23 ரூபாய்க்கு விற்பனையாயின. இரண்டாம் தரம் கொப்பரை குறைந்தபட்சமாக, 127.15, அதிகபட்சமாக, 153.49 ரூபாய்க்கு விற்பனையாயின. மொத்தம் ஒரு  கோடியே, 62 லட்சம் ரூபாய்க்கு கொப்பரை வர்த்தகம் நடைபெற்றது.

