/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ரூ.1.36 லட்சத்துக்கு கொப்பரை விற்பனை
/
ரூ.1.36 லட்சத்துக்கு கொப்பரை விற்பனை
ADDED : அக் 18, 2025 01:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, அவல்பூந்துறை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நடந்த ஏலத்துக்கு, 29 மூட்டை கொப்பரை தேங்காய் வரத்தானது. முதல் தரம் கிலோ, 193.60 - 211.60 ரூபாய், இரண்டாம் தரம், 101 - 195.16 ரூபாய் வரை, 641 கிலோ கொப்பரை தேங்காய், 1.36 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.
* கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று நடந்த தேங்காய் ஏலத்தில், ஒரு கிலோ, 59 ரூபாய் முதல் 61 ரூபாய் வரை விலை போனது. அதேபோல் தேங்காய் பருப்பு ஏலத்தில் முதல் தரம் ஒரே விலையாக கிலோ, 212 ரூபாய்க்கு விற்பனையானது.