ADDED : மே 14, 2025 01:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புன்செய்புளியம்பட்டார பகுதியில் ஏராளமான விவசாய நிலங்கள் உள்ளன. இதில், 60 சதவீதத்துக்கு மேல் மானாவாரி. கிணற்று பாசனம், போர்வெல் மூலம் இந்த நிலங்களுக்கு நீர் ஆதாரம் கிடைக்கிறது. மழையை நம்பி மட்டுமே மானாவாரி நிலங்களில் விவசாயிகள் நிலக்கடலை,தீவன சோளம், கம்பு சாகுபடி செய்கின்றனர். தற்போது பெய்த கோடை மழையால்,
மானாவரி பயிர் ரகங்களை பயிரிடும் வகையில் விவசாயிகள் பணியைத் துவங்கியுள்ளனர். பெரும்பாலும் சோளம், ராகி, கம்பு, நிலக்கடலை கோடை மழையைத் தொடர்ந்து பயிரிடப்படும்.இந்நிலையில் புன்செய் புளியம்பட்டி சுற்றுவட்டார பகுதி மானாவாரி நிலங்களில் விவசாயிகள் தீவன சோளம் பயிரிடும் பணியை துவங்கியுள்ளனர். தற்போது டிராக்டர் மூலம் உழவுப் பணி மேற்கொண்டு சோளம் விதைக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

