/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மாநகராட்சி நியமன கவுன்சிலர் பதவி ஏற்பு
/
மாநகராட்சி நியமன கவுன்சிலர் பதவி ஏற்பு
ADDED : நவ 28, 2025 12:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சிகளில் ஒரு நியமன கவுன்சிலர் பதவி மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்காக அந்தந்த உள்ளாட்சிகளில் விருப்ப மனு பெறப்பட்டு தேர்வு நடந்தது. தற்போது நியமனம் நடந்து வருகிறது.
இதன்படி ஈரோடு மாநகராட்சி நியமன கவுன்சிலராக, சமூக ஆர்வலரான சூளை ஈ.பி.பி நகரை சேர்ந்த செந்தில்குமார், 46, தேர்வு செய்யப்பட்டுள்ளார். மாநகராட்சி அலுவலகத்தில் ஆணையர் அர்பித்ஜெயின் முன்னிலையில், நேற்று பதவி ஏற்றுக்கொண்டார்.

