/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தனியார் பள்ளி மாணவி மாயம்; தந்தை புகார்
/
தனியார் பள்ளி மாணவி மாயம்; தந்தை புகார்
ADDED : நவ 28, 2025 12:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பவானி, சித்தோடு அருகே நசியனுாரை சேர்ந்தவர் சுரேஷ், 47; கார்மென்ட்ஸ் தொழிலாளி. இவரின் மகள் தனியார் பள்ளியில் பிளஸ் ௧ படிக்கிறார். காலாண்டு தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்ததால், வேறு பள்ளியில் சேர்க்குமாறு, பள்ளி நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
சுரேஷும் ஒப்புக்கொண்ட நிலையில், நேற்று முன்தினம் அதிகாலை மாணவி மாயமாகி விட்டார். மகளை கண்டுபிடித்து தருமாறு, சித்தோடு போலீசில் சுரேஷ் புகாரளித்துள்ளார். இதன் அடிப்படையில் போலீசார் தேடி
வருகின்றனர்.

