/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
இன்று முதல் பயன்பாட்டில் மாநகராட்சி வணிக வளாகம்
/
இன்று முதல் பயன்பாட்டில் மாநகராட்சி வணிக வளாகம்
ADDED : மார் 13, 2024 02:00 AM
ஈரோடு:ஈரோடு
ப.செ.பார்க்கில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில், மாநகராட்சி சார்பில்,
60 கோடி ரூபாய் செலவில் நான்கு தளங்களுடன் வணிக வளாகம் கட்டப்பட்டது.
இரு
ஆண்டுகளுக்கு முன் திறக்கப்பட்டாலும், அதீத வாடகையால் ஜவுளி
வியாபாரிகள் வாடகைக்கு வர முன்வரவில்லை. இதனால் கனிமார்க்கெட்
வியாபாரிகளுக்கு முன்னுரிமை அளித்து ஏலம் நடந்தது. இதை தொடர்ந்து
புதிய வணிக வளாகம் இன்று முதல் செயல்பாட்டுக்கு வருகிறது.
இதுகுறித்து
ஜவுளி வியாபாரிகள் கூறியதாவது: புதிய வணிக வளாகத்தில் தரைத்தளம்,
முதல் தளம், மூன்றாவது தளங்களில் கடை வைக்கிறோம். ஒரு சில நாட்களில்
வணிக வளாகம் முழுமையாக செயல்பாட்டுக்கு வந்துவிடும்.
பன்னீர்செல்வம் பார்க் முதல் மணிக்கூண்டு வரை சாலையோரம் செயல்பட்ட
ஜவுளிக்கடைகள் அகற்றப்பட்டன. அவர்களின் வாழ்வாதாரத்தை
பாதுகாக்கும் வகையில், மூன்றாவது தளத்தில் கடைகள் ஒதுக்கீடு
செய்யப்பட்டுள்ளது.
வணிக வளாகத்தில் தினசரி கடைகள் அமைக்கப்பட்ட
பின், ஏற்கனவே கடைகள் அமைத்திருந்த இடத்தில் வாரச்சந்தை நடத்த
அனுமதிக்க மாநகராட்சிக்கு கோரிக்கை விடுத்துள்ளோம். இவ்வாறு
கூறினர்.

