/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பொது இடங்களில் பேனர் வைக்க கூடாது மாநகராட்சி கடும் எச்சரிக்கை
/
பொது இடங்களில் பேனர் வைக்க கூடாது மாநகராட்சி கடும் எச்சரிக்கை
பொது இடங்களில் பேனர் வைக்க கூடாது மாநகராட்சி கடும் எச்சரிக்கை
பொது இடங்களில் பேனர் வைக்க கூடாது மாநகராட்சி கடும் எச்சரிக்கை
ADDED : அக் 25, 2024 12:56 AM
பொது இடங்களில் பேனர் வைக்க கூடாது
மாநகராட்சி கடும் எச்சரிக்கை
ஈரோடு, அக். 25-
தீபாவளிக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், ஈரோடு மாநகர பகுதி கடை வீதிகளில் மக்கள் கூட்டம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக மணிக்கூண்டு, பன்னீர்செல்வம் பார்க், ஆர்.கே.வி ரோடு உள்ளிட்ட பகுதிகளில் கூட்டம் அலைமோதுகிறது. மேலும் நகை கடை, பாத்திர கடைகளிலும் கூட்டம் காணப்படுகிறது. பல்வேறு சலுகை அறிவிப்பால் டிவி, செல்போன் உள்ளிட்ட எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் விற்பனையும் உயர்ந்துள்ளன.
இந்நிலையில் கடைகள், வணிக நிறுவனங்கள், மாநகராட்சி பகுதிகளில், உரிய அனுமதியின்றி பேனர் வைத்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, மாநகராட்சி நிர்வாகம் எச்சரித்துள்ளது.
இதுகுறித்து இளநிலை பொறியாளர் ஸ்வரன் சிங் கூறியதாவது: மாநகராட்சியில் விளம்பர பேனர் வைக்க மாநகராட்சி யாருக்கும் அனுமதி வழங்கவில்லை.
விதிமீறி வைக்கப்பட்ட விளம்பர பேனர் தொடர்ந்து அகற்றப்படுகிறது. இதுவரை, 150க்கும் மேற்பட்ட பலகைகளை அகற்றியுள்ளோம். அனுமதி கேட்டு, 50க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இதன் மீது ஆய்வு மேற்கொண்டு அனுமதி வழங்கப்படும். அனுமதியின்றி பேனர் வைத்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்
படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

