/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஓடத்துறை குளம் மீன் விற்பனையில் ஊழல் வேளாண் குறைதீர் கூட்டத்தில் குற்றச்சாட்டு
/
ஓடத்துறை குளம் மீன் விற்பனையில் ஊழல் வேளாண் குறைதீர் கூட்டத்தில் குற்றச்சாட்டு
ஓடத்துறை குளம் மீன் விற்பனையில் ஊழல் வேளாண் குறைதீர் கூட்டத்தில் குற்றச்சாட்டு
ஓடத்துறை குளம் மீன் விற்பனையில் ஊழல் வேளாண் குறைதீர் கூட்டத்தில் குற்றச்சாட்டு
ADDED : ஜூன் 11, 2025 01:33 AM
கோபி, கோபி கோட்ட அளவிலான வேளாண் குறைதீர் கூட்டம், கோபி ஆர்.டி.ஓ., அலுவலகத்தில், சப்-கலெக்டர் சிவானந்தம் தலைமையில் நேற்று நடந்தது.
கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:
ஓடத்துறை ஏரிநீர் பாசன விவசாயிகள் சங்கத்தலைவர் வெங்கடாசலம்: 'சிபில் ஸ்கோர்' முறையால் விவசாயிகள் பயிர் கடன் வாங்க முடியாத நிலைதான் உள்ளது. எனவே 'சிபில் ஸ்கோர்' முறையை ரத்து செய்ய வேண்டும். பராமரிப்புக்காக மின்வாரியம் மின் அறிவிப்பு செய்து, அதன்படி மின்நிறுத்தம் செய்யாத நாட்களில், அதுகுறித்து முறையாக அறிவிக்காததால் விவசாயிகள் திட்டமிட்ட பணி பாதிக்கிறது. மொடச்சூர் கிராமத்தில் 100 நாள் வேலையில், ஊழல் நடக்கிறது. ஓடத்துறை குளம் மீன் விற்பனையில் ஊழல் நடக்கிறது. சம்பந்தப்பட்ட மீன் வளத்துறையினர் ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஓடத்துறை குளத்தின் அவசர கால ஷட்டர் மற்றும் கட்டமைப்பை பலப்படுத்த வேண்டும்.
மேட்டூர் வலது கரை வாய்க்கால் பாசனம் தனபால்: மேட்டூர் அணையில் இருந்து நாளை, பாசனத்துக்கு திறக்க உள்ளனர். எனவே கிளை வாய்க்கால் துார்வாரி, பராமரிக்க ஆவண செய்ய வேண்டும். வலது கரை வாய்க்கால் முழுவதும் ஆக்கிரமிப்பு உள்ளது.
கோபி சப்-கலெக்டர் சிவானந்தம்: வாய்க்காலில் எந்தெந்த இடத்தில் இடையூறு உள்ளது என்ற பட்டியலை தரவும். அதுகுறித்து சர்வே செய்யப்படும்.
உழவர் விவாத குழு வெங்கடாசலம்: கொப்பு வாய்க்காலில் சாக்கடை கழிவுநீர் கலக்கிறது. எந்த பாசன வாய்க்காலிலும், கழிவுநீர் கலக்காத வகையில், அதுகுறித்து வி.ஏ.ஓ.,க்களுக்கு சப்-கலெக்டர் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும்.
விவசாயி பிரபாகர்: புதியதாக வீடு கட்டுவோர், ஒரு லட்சம் ரூபாய் செலவுக்காக, செப்டிக் டேங்க் கட்டுவதில்லை. அதற்கு பதிலாக கழிப்பிடத்தின் இணைப்பை பாதாள சாக்
கடையுடன் இணைத்து விடுகின்றனர். கட்டட அனுமதியின்போது அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும்.
கொளப்பலுாரி ஏரி நீரினை பயன்படுத்துவர் சங்கம் சண்முகம்: கொளப்பலுார் ஏரியில் உள்ள, 70 ஏக்கர் புறம்போக்கு நிலத்தில் ஆக்கிரமிப்பு உள்ளது. இதனால் தண்ணீர் ஊருக்குள் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. திருமண மண்டப கழிவுகளை ஏரியில் கொட்டுகின்றனர்.
கோபி சப்-கலெக்டர் சிவானந்தம்: திருமண மண்டபத்தில் இருந்து கழிவுகளை கொட்ட வரும்பொது, வாகனத்தை தடுத்து தகவல் தெரிவிக்கவும். அதன் பின் வி.ஏ.ஓ., மூலம், அபராதம் விதிக்க வழிவகை செய்யலாம். இவ்வாறு விவாதம் நடந்தது.