'கோட் பாக்ஸ் தடுப்பூசி' செலுத்தும் பணி கால்நடை வளர்ப்போர் பயன் பெறலாம்
'கோட் பாக்ஸ் தடுப்பூசி' செலுத்தும் பணி கால்நடை வளர்ப்போர் பயன் பெறலாம்
ADDED : அக் 29, 2026 03:21 AM
ஈரோடு:ஈரோடு மாவட்டத்தில், கால்நடைகளை தோல் கழலை நோய் தாக்கத்தில் இருந்த காக்க, 'கோட் பாக்ஸ் தடுப்பூசி' செலுத்தும் பணி கால்நடைத்துறை மூலம் நடக்கிறது.
வைரஸ் கிருமியால் இந்நோய் ஏற்படுகிறது. ஈ, கொசு, உண்ணி மூலமும், கறவையாளர்கள், கன்றுக்குட்டிகள் பாதிக்கப்பட்ட மாட்டின் பாலை அருந்துவதாலும், நோய் பாதிப்பு உள்ள இடங்-களில் இருந்து நோயற்ற பகுதிக்கு வந்து செல்வதால் பரவுகிறது.பாதிக்கப்பட்ட கால்நடைகளின் கண்ணில் நீர் வடிதல், மூக்கில் சளி வடிதல், கடுமையான காய்ச்சல், உடல் முழுவதும் கண்டு, கண்டாக வீங்குதல், உருண்டையான கட்டி
கள் உடைந்து சீழ் வெளியேறுதல், நிணநீர் சுரபிகள் பெரிதாக காணப்படுதல், கால்கள் வீங்குதல் அறிகுறியாகும். நோய் பாதித்த மாடுகளில் பால் உற்பத்தி குறைவு, சினை பிடிப்பு பாதிப்பு, தீவனம் உட்கொள்ளாதது, உடல் எடை குறைதல், இளம் சினை மாடுகளில் கருச்சிதைவு, சில மாடுகளில் மடிநோய் ஏற்படும்.
இதனை தடுக்க தடுப்பூசி குழு அமைத்து, மாவட்டத்தில் உள்ள, 2 லட்சத்து, 41,800 பசு மாட்டினங்கள், கன்றுகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி நடக்கிறது. ஈரோடு கால்நடை நோய் புலனாய்வு பிரிவு குளிரூட்டப்பட்ட அறையில், 2.40 லட்சம் டோஸ் தடுப்-பூசி மருந்து தயாராக உள்ளது. கால்நடை வளர்ப்போர், முகாமை பயன்
படுத்தி தங்கள் கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தி பயன் பெறலாம்.
