sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

குப்பை கிடங்கு போல் காட்சியளிக்கும் மாநகராட்சி வார்டுகள் கூட்டத்தில் கவுன்சிலர்கள் கொதிப்பு: அதிகாரிகள் சமாளிப்பு

/

குப்பை கிடங்கு போல் காட்சியளிக்கும் மாநகராட்சி வார்டுகள் கூட்டத்தில் கவுன்சிலர்கள் கொதிப்பு: அதிகாரிகள் சமாளிப்பு

குப்பை கிடங்கு போல் காட்சியளிக்கும் மாநகராட்சி வார்டுகள் கூட்டத்தில் கவுன்சிலர்கள் கொதிப்பு: அதிகாரிகள் சமாளிப்பு

குப்பை கிடங்கு போல் காட்சியளிக்கும் மாநகராட்சி வார்டுகள் கூட்டத்தில் கவுன்சிலர்கள் கொதிப்பு: அதிகாரிகள் சமாளிப்பு


ADDED : ஜூலை 29, 2025 01:17 AM

Google News

ADDED : ஜூலை 29, 2025 01:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, ஜூலை 29

ஈரோடு மாநகராட்சி கூட்டம் நேற்று நடந்தது. மேயர் நாகரத்தினம் தலைமை வகித்தார். ஆணையர் அர்பித் ஜெயின், துணை மேயர் செல்வராஜ், கவுன்சிலர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், 45 தீர்மானங்கள் முன் வைக்கப்பட்டன. இதை தொடர்ந்து கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசினர்.

43வது வார்டு கவுன்சிலர் சபுராமா (காங்.,): குப்பை நிறைந்த பகுதிகளின் வரிசையில், இந்திய அளவில் ஈரோடு மாநகராட்சி இரண்டாமிடத்தை பிடித்துள்ளதாக ஓர் அமைப்பு பட்டியல் வெளிட்டுள்ளது. வரி முறையாக செலுத்தியும் குப்பை அள்ளுவதில்லை என்றார்.

அதிகாரிகள்: குப்பைகளை தரம் பிரிப்பதில் பெரும் சிக்கல் உள்ளது. குப்பைகளை பிரித்து தர மக்களுக்கு அறிவுறுத்தி வருகிறோம். பல்வேறு நடவடிக்கை எடுத்து வருவதால், விரைவில் தீர்வு காணப்படும்.

நான்காம் மண்டல தலைவர் தண்டபாணி: இயற்கை இடர்பாட்டால் ஏற்படும் பழுதுகளை சரி செய்ய மாநகராட்சி கட்டடங்களில் இருக்கும் வியாபாரிகளிடம் வைப்புத்தொகை பெறுவது சரி. ஆனால், சாலையோர வியாபாரிகளிடம் நிர்ப்பந்தம் செய்வது தவறு. இதை கைவிட வேண்டும். வெண்டிபாளையம் குப்பை கிடங்கை முறைப்படுத்தாமல் இருப்பதால்தான் தீ விபத்து ஏற்படுகிறது. மாநகராட்சி வணிக கட்டடங்கள் பெரும்பாலும் ஏலம் போகாமலிருக்க, அதிக வாடகை நிர்ணயமே காரணம். ஏலம் போகாத வளாகத்தை பெரிய கார்ப்பரேட்டுகளுக்கு கொடுத்தால் வருமானம் பெறலாம். வியாபாரத்துக்கு ஏற்ற வகையில் கட்டடம் கட்டாமல், மால் போல் கட்டுவதால் வியாபாரிகள் பாதிக்கின்றனர்.

பொதுவான கோரிக்கைகளாக கவுன்சிலர் பேசியதாவது:

பெரும்பாலான வார்டுகளில் குப்பை அள்ளுவதில் பிரச்னை நிலவுகிறது. துாய்மை பணியாளர்கள் ஓய்வு பெற்ற பிறகு மாற்று ஏற்பாடு செய்வதில்லை. ஆட்கள் பற்றாக்குறையால் குப்பை கிடங்கு போல் வார்டு காட்சியளிக்கிறது. துார்வாரும் வாகனங்களில் ஏற்படும் பழுதை உடனடியாக சரி செய்ய வேண்டும்.

குண்டும், குழியுமாக உள்ள மாநகர முதன்மை சாலைகளை சீரமைக்க வேண்டும். குடிநீர் குழாய் இணைப்பு, போர்வெல் பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து தீர்வு காண வேண்டும்.

செலவுகளில் சந்தேகம்

ஈரோடு எம்.பி., தேர்தல், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் மற்றும் பகுதி சபா கூட்ட செலவீனங்களை, மொத்தமாக ஒருமுறையில் கொண்டு வராமல், தாமதமாக ஒவ்வெரு இடமாக கொண்டு வரப்படுவது ஏன்? தேர்தல் செலவினம் அதிகமாக போடப்பட்டுள்ளது.

ஒரு பள்ளிக்கு எட்டு லட்சம் செலவாகுமா? இந்த செலவீன தீர்மானங்களை கொண்டுவர இரண்டு வருடமா எடுத்துக் கொள்வது? என்று, கவுன்சிலர்கள் கேள்வி எழுப்பினர்.

அதிகாரிகள் பதில்

செலவீனங்கள் குறித்து ஆணையரிடம் ஒப்புதல் பெற்றே கொண்டு வருகிறோம். என்ன செலவு, எவ்வாறு இந்த தொகை வந்துள்ளது என்பதை அதிகாரிகள் விவரித்தனர். இதை ஏற்றுக்கொண்ட கவுன்சிலர்கள், பில்களை விரைவாக, ஒரே முறையில் தாக்கல் செய்ய வலியுறுத்தினர்.

நிறைவாக....

ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டத்தை முழுமைப்படுத்த வேண்டும். பாதாள சாக்கடை திட்டத்தில் உள்ள பிரச்னைகளை முழுமையாக சரி செய்வது தொடர்பாக கூட்டத்தில் கொண்டு வரப்பட்ட 1, 2வது தீர்மானங்கள் ரத்து செய்ய கவுன்சிலர்கள் வலியுறுத்தினர். அதேசமயம் தீர்மானத்தை நிறைவேற்றி கொடுக்க அதிகாரிகள் கோரிக்கை விடுத்தனர். இதை கவுன்சிலர்கள் ஏற்காததால், இரண்டு தீர்மானங்களையும் ரத்து செய்வதாக அறிவித்து, மற்ற, 43 தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.






      Dinamalar
      Follow us