/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பு.புளியம்பட்டி நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் காரசார விவாதம்
/
பு.புளியம்பட்டி நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் காரசார விவாதம்
பு.புளியம்பட்டி நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் காரசார விவாதம்
பு.புளியம்பட்டி நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் காரசார விவாதம்
ADDED : ஜூன் 05, 2025 01:08 AM
புன்செய்புளியம்பட்டி, புன்செய்புளியம்பட்டி நகராட்சி சாதாரண கூட்டம் தலைவர் ஜனார்த்தனன் தலைமையில் நேற்று நடந்தது. துணைத் தலைவர் சிதம்பரம், கமிஷனர் கருணாம்பாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டம் தொடங்கியதும் கவுன்சிலர்கள் வார்டு பிரச்னைகள் குறித்து பேசினர்.
இதன் விபரம்:
அ.தி.மு.க., கவுன்சிலர் புவனேஸ்வரி: நகராட்சிக்கு சொந்தமான திருமண மண்டபம் இடிந்து விழும் நிலையில் உள்ளதால், மக்கள் பயன்பாட்டிற்கு விடப்படுவதில்லை என நகராட்சியால் அறிவிக்கப்பட்டு, இரு ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. இந்நிலையில், அம்ருத் திட்ட ஒப்பந்த ஊழியர்கள் அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் தங்கியுள்ளனர்.
தி.மு.க.,கவுன்சிலர் பூர்ண ராமச்சந்திரன்: விதிமுறைப்படி மினிட் புத்தகம் நகர்மன்ற கூட்ட அரங்கில் தான் வைக்க வேண்டும். ஆனால், தலைவர் அறையில் வைக்கப்பட்டுள்ளது. மினிட் புத்தகத்தை கூட்ட
அரங்கில் வைப்பதில் என்ன தயக்கம்; அதில் தவறுகள் இரு ப்பதாக சந்தேகமாக உள்ளது.
தலைவர்: மினிட் புத்தகத்தை கூட்ட அரங்கில் வைக்க முடியாது; தலைவர் அறையில் தான் இருக்கும். அனுமதி பெற்று கவுன்சிலர்கள் பார்த்துக் கொள்ளலாம்.
துணைத் தலைவர் சிதம்பரம்: தினசரி மார்க்கெட் ஏலம், மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிலையில் இரண்டு மாதங்களாக, 10 லட்ச ரூபாய் நகராட்சிக்கு நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து, நகர்மன்றத்தில் தெரிவிக்காதது ஏன்.
கமிஷனர் கருணாம்பாள்: தினசரி மார்க்கெட் ஏலம் தொடர்பாக, தலைவரிடம் கடிதம் கொடுத்துள்ளதோடு, விவாதிக்கப்பட்டுள்ளது. தினசரி மார்க்கெட் ஏலம் எடுத்தவர், முன்கூட்டியே சரண்டர் செய்துவிட்டு சென்ற நிலையில், அடுத்த ஏல காலம் வரை அவர் தான் நிதி இழப்புக்கு பொறுப்பேற்க வேண்டும் என அரசாணை உள்ளது.
கமிஷனர் பதிலால் கோபமடைந்த துணைத் தலைவர் சிதம்பரம், அரசாணையை துாக்கி குப்பையில் போடுங்கள் என்றார்.
நகரமன்ற கூட்டம் முடிந்து தலைவர் வெளியே வரும்போது, 4வது வார்டு கவுன்சிலர் துளசிமணியின் மகன் ஜெகன் என்பவர், எங்கள் வார்டில் கட்டப்பட்டுள்ள மேல்நிலைத் தொட்டியில் தண்ணீர் ஏற்றி வினியோகம் செய்ய, நான்கு ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும் துணைத் தலைவர் அதற்கு தடையாக உள்ளார், மக்கள் நலன் கருதி நீங்களாவது அதை நிறைவேற்றி கொடுங்கள்; மக்களுக்காக நான் காலில் விழுகிறேன் என கூறி, தலைவர் காலில் விழுந்து கோரிக்கை விடுத்தார்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.