/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வரும் ஜூன் 4ல் ஓட்டு எண்ணிக்கை: மொபைல் போன் பயன்படுத்த தடை
/
வரும் ஜூன் 4ல் ஓட்டு எண்ணிக்கை: மொபைல் போன் பயன்படுத்த தடை
வரும் ஜூன் 4ல் ஓட்டு எண்ணிக்கை: மொபைல் போன் பயன்படுத்த தடை
வரும் ஜூன் 4ல் ஓட்டு எண்ணிக்கை: மொபைல் போன் பயன்படுத்த தடை
ADDED : மே 09, 2024 06:16 AM
நாமக்கல் : ''வரும் ஜூன், 4ல் லோக்சபா தேர்தல் ஓட்டு எண்ணிக்கையின் போது, மையத்திற்குள் மொபைல் போன் எடுத்து வர தடை விதிக்கப்பட்டுள்ளது,'' என, நாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் உமா தெரிவித்தார்.
இதுகுறித்து, நிருபர்களிடம் அவர் கூறியதாவது: ஏப்., 19ல் நாமக்கல் லோக்சபா தொகுதி தேர்தலில் பதிவான ஓட்டுகள் அடங்கிய மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம், கட்டுப்பாட்டு கருவி, விவிபேட் ஆகியவை, திருச்செங்கோடு விவேகானந்தா மகளிர் பொறியியல் கல்லுாரியில் அமைக்கப்பட்டுள்ள ஓட்டு எண்ணும் மையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. வரும் ஜூன், 4 காலை, 8:00 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை துவங்கி தொடர்ந்து நடக்கும். சட்டசபை தொகுதி வாரியாக, தனித்தனியாக ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
ஓட்டு எண்ணும் மையத்தில் அடையாள அட்டை உள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். மொபைல் போன் எடுத்து செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. ஓட்டு எண்ணும் மையத்திற்கு உட்புறம், மத்திய பாதுகாப்பு படை, தமிழக சிறப்பு காவல்படை, நாமக்கல் மாவட்ட ஆயுதப்படை போலீசார் என, 93 பேர், 3 அடுக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வெளிப்புறம், 53 போலீசார் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். 272 'சிசிடிவி' கேமராக்கள் பொருத்தப்பட்டு, 17 'டிவி' மூலம், 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் இருந்து வருகிறது.
வேட்பாளர்கள் மற்றும் அவர்களது ஏஜன்ட்கள், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் உள்ள பாதுகாப்பு அறைகளை கண்காணிக்கும் வகையில், ஏஜன்ட்களுக்கான அறையில், தனியே, 6 'டிவி'க்கள் அமைக்கப்பட்டுள்ளன. மின்தடை ஏற்படாமல் இருக்க, 3 ஜெனரேட்டர்கள், 270 கிலோ வாட் அளவில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. வருவாய்த்துறை சார்பில், ஓட்டு எண்ணிக்கை மைய பாதுகாப்பில், ஒரு தாசில்தார், துணை தாசில்தார், ஆர்.ஐ., என்ற அடிப்படையில், 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஓட்டு எண்ணிக்கை நாளில், 273 அலுவலர்கள், பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.